நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறை கர்ப்பமாக உள்ளாரா? டீவீட் போட்ட அபிஷேக். குழப்பத்தில் ரசிகர்கள்.

0
43623
aiswarya-rai

இந்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் அமீதாப் பட்சன். இவரது மகன் தான் அபிஷேக் பட்சன். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் அபிஷேக் பட்சனும் ஒருவர். இவர் ரேப்புஜி படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 2004ஆம் வெளிவந்த தூம் மற்றும் யுவா படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு அபிஷேக் பட்சன் தற்போது “Manmarzian ” என்ற புதிய படத்தில் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக டாப்ஸி பண்ணு நடித்து இருந்தார். இந்த படத்தை “இமைக்கா நொடிகள் “படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த அனுரங் கஷ்யப்ப தான் இயக்கி உள்ளார். கடந்த ஆண்டு இந்த படம் வெளியானது.

நடிகர் அபிஷேக் பட்சன் அவர்கள் 2007 ஆண்டு பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களை திருமணம் செய்து கொண்டார். 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் அவர்கள் படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு தேவதையாகவே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யாராயின் கணவரும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் அவர்கள் ரசிகர்களுக்காக ஒரு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டு உள்ளது என்று ட்விட்டரில் குறிப்பிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன சர்ப்ரைஸ் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதிலும் மண்டையை உடைத்துக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் குழம்பி போய் உள்ளார்கள். அதில் சில பேர் நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் என்றும் கூறி உள்ளனர். பின் சில பேர் உங்களுடைய புது படம் குறித்து எதாவது சொல்லப் போகிறீர்களா? என்று கூறி உள்ளார்கள்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் அபிஷேக் பச்சன் #Jhund படத்தின் டீசரை அடுத்ததாக வெளியிட்டார். உண்மையில் இது தான் இவர் சொல்ல வந்த சர்ப்ரைஸா? என்றும் கூறுகிறார்கள். ஆனால், தற்போது வரை இது பலருடைய கேள்வியாகவே உள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் இப்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து படத்தை இயக்குகிறார் மணிரத்தனம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

Advertisement