அம்பானி இல்லத் திருமணத்தில் நடந்த விஷயத்தால் மீண்டும் புகையும் ஐஸ்வர்யா ராயின் விவாகரத்து சர்ச்சை

0
437
- Advertisement -

அம்பானி வீட்டு திருமணத்தால் மீண்டும் ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் ஆனந்த் அம்பானி திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உலக அளவில் மிக பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் திருமணம் கொண்டாட்டங்கள் நடைபெற்று இருக்கிறது. தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள், ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை தான் ஆனந்த் அம்பானி திருமணம் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அதேபோல் இந்தியாவில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை உள்ள பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து இருந்தார்கள். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை ராதிகா- ஆனந்த் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அம்பானி வீட்டு திருமணத்தில் மாப்பிள்ளை தோழர்களாக கலந்து கொண்ட பிரபலங்களுக்கு 2 கோடி மதிப்பிலான ஓடோமா பிகே வாட்சை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 5000 கோடி வரை திருமண செலவு ஆனதாக கூறப்படுகிறது. நடந்த முடிந்த அம்பானி வீட்டு திருமண விழாவில் பல பிரபலங்கள் தங்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து வந்து இருந்தார்கள்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் விவாகரத்து:

அந்த வகையில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் குடும்பமும் வந்திருந்தது. ஆனால், ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் சேர்ந்து தனியாக வந்திருந்தார். இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சன், தன்னுடைய அப்பா, அம்மா சகோதரி உடன் தனியாக வந்திருந்தார். இருவருமே தனித்தனியாகத் தான் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். தற்போது இது தொடர்பான செய்திகள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும், இவர்கள் இருவரும் பிரிய போகிறார்களா? என்ன பிரச்சனை? என்றெல்லாம் கேட்க தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் உலவி வந்தது.

ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் விவகாரம்:

அதன் பின் இருவருமே ஜோடியாக இருந்த புகைப்படம் வந்தவுடன் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதற்குப் பின் இவர்கள் இருவரும் அம்பானி வீட்டு திருமணத்தில் தனித்தனியாக கலந்து கொண்டு இருந்தது தான் மீண்டும் புகைய ஆரம்பித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் கூடிய விரைவிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தான் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராய் குறித்த தகவல்:

எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். இவர் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

குடும்ப வாழ்க்கை :

மேலும், இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னனி நடிகையாக நிலைத்து இருந்தவர். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான பெண் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement