பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா. மருத்துவமனையில் அனுமதி. ஐஸ்வர்யா ராய்யின் நிலை ?

0
1159
amithab
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நானாவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்டுள்ளரனர். 77 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.

இதையும் பாருங்க : பிறந்து இரண்டு வாரத்தில் இறந்த மூத்த மகள் – டிஷ்யூம், காவலன் பட நடிகர் பக்ரு வாழ்வில் ஏற்பட்ட சோகம்.

- Advertisement -

அதில், எனது குடும்பத்தார் மற்றும் எனது பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.  கடந்த 10 நாட்களுக்குள் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். சிறிது நேரத்தில் அவருடைய மகனும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் அமிதாப் குடும்பத்தில் உள்ள, அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement