தன்னுடைய மகள் குறித்த கேள்விக்கு கோபமாக ஐஸ்வர்யா ராய் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியைச் சேர்ந்த யாஸ் தீவில் 2023 ஆம் ஆண்டுக்கான IIFA விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக, இந்த விழாவில் தென் தமிழகத்தை சேர்ந்த விக்ரம், சிரஞ்சீவி, ஏ ஆர் ரகுமான், மணிரத்தினம், சமந்தா ஆகியோரும், பாலிவுட்டில் இருந்து ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், ஷாஹித் கபூர், ஷபானா ஆஸ்மி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். பின் இந்த விழாவில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக முன்னணி கதாபாத்திரத்திற்கான விருது ஐஸ்வர்யா ராய்க்கு வழங்கப்பட்டது.
விருது வாங்கிய ஐஸ்வர்யா ராய்:
இதனை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா ராய் நன்றி தெரிவித்திருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் மகள் ஆராத்யாவை அழைத்துக் கொண்டு செல்கிறீர்களே ஏன்? என்று கேட்டிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ஐஸ்வர்யா ராய், அவள் என்னுடைய மகள். அதனால் தான் நான் என்னுடன் இருக்கிறாள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்று கூறியிருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.
ஐஸ்வர்யா ராய் திரைப்பயணம்:
எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய் தான். இவருடைய கண் அழகும், நடிப்பிற்கும் இன்னும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் குறித்த தகவல்:
மேலும், இவர் 22 ஆண்டுகளுக்கு இந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக நிலைத்து இருந்தவர். இவர் தமிழ், பெங்காலி, ஆங்கிலம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி ரோலில் மிரட்டி இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். இந்த படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது.
ஐஸ்வர்யா ராய் விவாகரத்து:
இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான பெண் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். ஆனால், சமீப காலமாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் உலவி வருகிறது. இது குறித்து இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.