மகளுடன் படம் பார்க்க வந்த ஐஸ்வர்யா ராயின் கையை பிடித்து வந்து விக்ரம் செய்த செயல் – வைரலாகும் வீடியோ

0
550
vikram
- Advertisement -

திரையரங்குக்கு வெளியே ஐஸ்வர்யா ராயை அழைத்து வந்து சியான் செய்திருக்கும் சேட்டை தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சில தினங்களுக்கு முன் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

படத்தின் வசூல்:

அதோடு படம் வெளியாகி மூன்று நாள் முடிவில் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது.
விக்ரம், வலிமை போன்ற படங்களின் மூன்று நாள் வசூலை காட்டிலும் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திரையரங்கிற்கு வெளியே ஐஸ்வர்யா ராயை வைத்து சியான் விக்ரம் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

திரையரங்கில் படக்குழுவினர்:

அதாவது, பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க சென்னை சத்தியம் திரையரங்கிற்கு ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளுடன் வந்திருந்தார். ஜெயம் ரவி தன்னுடைய மனைவியுடன் வந்திருந்தார். இவர்களுடன் மணிரத்தினம், சுகாசினி, விக்ரம், விக்ரம் பிரபு, திரிஷா, கார்த்தி என பொன்னியின் செல்வன் பட குழுவினர் தங்களுடைய குடும்பத்துடன் வந்து படத்தை பார்த்து இருந்தனர். படம் முடிந்து வெளியே வந்த பிறகு ரசிகர்கள் பலரும் உற்சாகமாக ஐஸ்வர்யா ராயின் பெயரையும், விக்ரம் பெயரையும் கூச்சலிட்டு கத்திக் கொண்டிருந்தார்கள்.

விக்ரம் செய்த செயல்:

அப்போது விக்ரம் அவர்கள் ஐஸ்வர்யா ராயின் கையை பிடித்து ரசிகர்களிடம் அழைத்து வந்து தமிழில் பேசுங்கள் என்று கூறி இருக்கிறார். உடனே ஐஸ்வர்யா ராய், நன்றி நன்றி என்று கூறி பிளையிங் கிஸ்ஸும் கொடுத்து இருக்கிறார். பின் விக்ரம் அவர்கள் படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு ரசிகர்கள் மூன்று முறை என்று சொன்னவுடன் ஐஸ்வர்யா ராய்க்கு மட்டற்ற மகிழ்ச்சியில் கைதட்டி சிரித்து இருக்கிறார். இப்படி ஐஸ்வர்யா ராய், விக்ரமின் இந்த அழகான சேட்டை வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement