ஸ்டரைட்டா கிஸ்ஸுதான். லவ் ப்ரோபோசல் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ். வீடியோ இதோ.

0
22343
Ayswarya Rajesh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். இவருக்கு இந்த கனா படம் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

-விளம்பரம்-
Image result for aishwarya rajesh kiss scene dhanush"

- Advertisement -

மேலும், தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மணிரத்னம் என்று பல்வேறு இயக்குனர்களின் படத்தில் நடித்துவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தற்போது தமிழில் வானம் கொட்டட்டும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு ராதிகா சரத்குமார் என்று பலர் நடிக்கிறார். இதனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷிடம் இந்த இயக்குனர்கள் எல்லாம் எப்படி அவர்களுடைய படத்தில் காதலை சொல்லுவார்கள் என்று சொல்லுங்கள் என்று ஒரு ஜாலியான கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அப்போது கௌதம் மேனன், மணி ரத்னம் போன்றவர்களின் படங்களில் எப்படி காதல் சொல்லப்படும் என்று கூறிக்கொண்டே வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது வெற்றிமாறன் படத்தில் எப்படி காதலை சொல்லுவார் என்று கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

வீடியோவில் 1:25 நிமிடத்தில் பார்க்கவும்

அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஹேய் இன்னா, டௌலத்தா இருக்கும். அந்த வார்த்தைகளை கூட நாங்கள் பயன்படுத்துவோம். அவருடைய படங்கள் என்றாலே ஸ்டரைட்டா கிஸ்ஸு தான். அவர் மிகவும் தத்ரூபமாக இருப்பார். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனிப்பட்ட ஸ்டைல் இருக்கும் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தில் முத்த காட்சியில் நடித்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement