பிரபல நடிகையுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படம் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி என பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா, நம்ம வீட்டு பிள்ளை உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.
ஆனால், கனா படம் இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது. பின் இவர் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். இந்த படத்தில் என்ற ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். இறுதியாக இவர் மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணம்:
தற்போது இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். கடைசியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் . இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது தமிழில் போன்று தெலுங்கு சினிமாவிலும் ஐஸ்வர்யா பிரபலமாகியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படங்கள்:
இதனை தொடர்ந்து இவர் தற்போது இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் என்று பல படத்தில் நடித்து வருகிறார். இருந்தாலும் இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகையுடன் சேர்ந்து நடித்து இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ்- சினேகா நடித்த படம்:
அவர் வேற யாரும் இல்லைங்க, நம்ம புன்னகை அரசி சினேகா தான். சமீபத்தில் விளம்பர படமொன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சினேகா ஆகிய இருவரும் இணைந்து நடித்து உள்ளனர். இந்த நிலையில் இந்த விளம்பர படத்தில் சினேகா உடன் நடித்த அனுபவத்தை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது.
நான் சின்னப் பெண்ணாக இருந்த போது சினேகாவின் படப்பிடிப்பை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மூலையில் நின்று என்னுடைய அம்மாவுடன் பார்த்திருக்கிறேன்.
வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் பதிவு:
படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது எனது அம்மா கூப்பிட்ட போதிலும் அந்த படப்பிடிப்பில் இருந்து வெளியே வர எனக்கு மனதே வரவில்லை. அப்படி ஒரு அழகான நடிகை சினேகா. இன்று அவருடன் ஒரு விளம்பரப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த விளம்பர புகைப்படமும் இவருடைய பதிவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.