அட, 6 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் – புகைப்படம் இதோ.

0
2906
ayswarya
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். சிவகார்த்திகேயனை போல சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். ஆரம்பத்தில் காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். ஆம், தெலுங்கில் கடந்த 1996 ஆம் ஆண்டு ராஜேந்திர பிரசாத் நடிப்பில் வெளியான ‘ராம்பண்டு ‘ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தான் இவர் சினிமா உலகில் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்த போது இவருக்கு வயது 6 வயது தான்.

- Advertisement -

அதன் பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்கவில்லை. ஆனால், இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது என்னவோ, 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நீதான அவன்’ என்ற படத்தின் மூலம் தான். ஆரம்பத்தில் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பின்னர் இவருக்கு ரம்மி, பண்ணையாரும் பத்மினி போன்ற படங்கள் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

பின்னர் இந்த இளம் வயதிலேயே அம்மாவாகவும், ஹீரோவின் தங்கையாகவும் நடித்தது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்பது வியப்பான விஷயம் தான். தற்போது லீட் ரோலில் நடிக்கும் அளவிற்கு ஒரு டாப் ஹீரோயினாக மாறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

-விளம்பரம்-
Advertisement