சேரி குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன விஷயம் – அப்போ இது என்ன ? கடுப்பான ரசிகர்கள்.

0
1546
ayswaryarajesh
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். சிவகார்த்திகேயனை போல சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். ஆரம்பத்தில் காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். அதன் பின்னர் சினிமாவில் நடிக்கத் துவங்கிய இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தரமான ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது. அரசியல் கட்சிகளை தாண்டி சினிமா பிரபலங்கள் கூட இந்தி திணிப்பிற்கு எதிரியாக சமூக வலைதளத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரருடன் இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து போஸ் கொடுத்திருந்தார். ஆனால், இந்தி நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு இந்தி தெரியும் என்று சொன்ன வீடீயோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து ஐஸ்வர்யா ராஜேஷை கேலி செய்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சேரி குறித்து இங்கொன்றும் அங்கொன்றும் பேசிய வீடியோ ஒன்றை தற்போது நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் தமிழ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனக்கு சேரி பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார். ஆனால், ஒரு மேடையில் ஆங்கிலத்தில் பேசும் போது தான் சேரியில் பிறந்தவள் என்று கூறுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த இரட்டை முக பேச்சை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷ், வட சென்னை படம் குறித்து பேசிய போது ஒன்றை கூறி இருந்தார். அதாவது இந்த படத்தில் நடித்த போது இயக்குனர் வெற்றிமாறன், எதாவது தெரிந்த கெட்ட வார்த்தை பேச சொன்னாராம், உடனே கண்ணை மூடிக்கொண்டு பல கெட்ட வார்த்தைகளை பேசினாராம். பின்னர் திரும்பி பார்த்தால் வெற்றிமாறன் ஆச்சரித்தோடு பார்த்த படியே நின்று கொண்டு இருந்தாராம். பின்னர் நீ தான்மா இந்த படத்திற்கு ஹீரோயின் என்று சொன்னாராம்.

-விளம்பரம்-
Advertisement