பேண்ட் மற்றும் புடவை, இது என்ன புது காம்பினேஷன். அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.

0
66127
aiswarya-rajesh

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . இவர் 2011 ஆம் ஆண்டு திரையுலகில் வெளியான ‘அவர்களும் இவர்களும்’ படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி ராஜேஷ் பல துறைகளில் பங்காற்றியவர். இந்த படத்தின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். அதை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, முட்டை, வீட்டு பிள்ளை உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். அதோடு தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தை தான் தமிழில் கனா என்று ரீமேக் செய்தார்கள்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த “நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பையும், வசூலிலும் தெறிக்க விட்டது என்று கூட சொல்லலாம். இதனை தொடர்ந்து இயக்குனர் நிர்மல் குமார் படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் டக் ஜெகதீஷ் என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா தான் ஹீரோவாக நடிக்கிறார்.

- Advertisement -

அதோடு விஜய் தேவர்கொண்டாவுக்கு மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் ஐஸ்வர்யா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றார்கள். இயக்குனர் க்ரந்தி மாதவ் தான் இந்த படத்தின் கதை, வசனம் எழுத்தாளர் ஆவார். தற்போது நயன்தாராவிற்கு அடுத்து பட வாய்ப்புகளை அதிகமாக வைத்திருப்பது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டும் இல்லாமல் அவர் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார்.

அப்படி தற்போது இவர் வெளியிட்டு உள்ள புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து உள்ளது. சமீப காலமாகவே அல்டரா மாடர்னாக திரிந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது வித்யாசமான புடைவை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதில் ஜீன்ஸ் அணிந்து கொண்டு அதற்கு மேல் புடவை அணித்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்குள்ளாகி உள்ளது. ஆனால், சில பேர் இது என்ன கண்றாவி லுக்கு என்று கலாய்த்தும், கிண்டல் செய்தும் வருகிறார்கள். மேலும், இது புது படத்திற்கான போஸாக இருக்கும் என்றும் கேட்டு வருகிறார்கள். அதிலும் ஒரு சில பேர் நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ்??? என்றும், ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்துவிட்டதோ? என்றும் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement