தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, நம்ம வீட்டு பிள்ளை உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தை தான் தமிழில் கனா என்று ரீமேக் செய்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் நிர்மல் குமார் படத்தில் நடித்து உள்ளார். மேலும், இவர் டக் ஜெகதீஷ் என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடிக்கிறார். விஜய் தேவர்கொண்டா அவர்கள் சினிமா உலகிற்கு வந்த குறுகிய நாளிலேயே இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். மேலும், இவருடைய அர்ஜுன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என்றும், தமிழில் ஆதித்யா வர்மா என்றும் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். அந்த அளவிற்கு இந்த படம் மாஸ் காட்டியது. அதோடு விஜய் தேவர்கொண்டா ‘நோட்டா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். கடைசியாக இவர் டியர் காம்ரேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் டப்பிங் செய்து வெளியானது. நடிகை ராஷ்மிகா ஹீரோயினாக இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு விஜய் தேவர்கொண்டா எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
இதையும் பாருங்க : இப்படி ஒரு நாளில் கூட சேரனை சென்று சந்திக்காத லாஸ்லியா. ஆனால், இவர் போயிருக்கார்.
இந்நிலையில் தான் இவர் “வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்” என்ற படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் என்ற விஜய் தேவர்கொண்டா லவ்வர் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார் என்று தெரிய வந்து உள்ளது. அதோடு விஜய் தேவர்கொண்டாவுக்கு மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரேசா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றார்கள். இயக்குனர் க்ரந்தி மாதவ் தான் இந்த படத்தின் கதை, வசனம் எழுத்தாளர் ஆவார்.
இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக இருக்க போகிறது. சும்மாவே நம்ப ஆளு ரொமான்ஸில் தூள் கிளப்புவார். நான்கு ஹீரோயின்கள்னா?? வேற லெவல்ல படம் இருக்கப்போகிறது என்று புலம்பி வருகிறார்கள் ரசிகர்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படத்தின் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் பயங்கர எதிர்பார்ப்புகளுடன் உள்ளார்கள் என தெரிவித்துள்ளது.
இதே செய்தியை கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ‘பெண்களின் கனவு கண்ணனுக்கு மனைவியானார். புலம்பும் ரசிகர்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். ஆனால், தற்போது அந்த தலைப்பை திருத்தி அப்டேட் செய்துள்ளோம். தற்போது இந்த பதிவிற்கு கொடுப்பட்டுள்ள தலைப்பு தான் சரியான தலைப்பு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.