இப்படி ஒரு நாளில் கூட சேரனை சென்று சந்திக்காத லாஸ்லியா. ஆனால், இவர் போயிருக்கார்.

0
83063
cheran-losliya
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட பட்டையைக் கிளப்பியது கூட சொல்லலாம். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மத்த ரெண்டு சீசன்களை விட காதல், கலவரங்கள், சண்டைகளுக்கு பஞ்சமே இல்ல. அந்த அளவிற்கு வேற லெவல்ல போயிருந்தது. இந்த சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேசப்பட்டார் இய்குனார் சேரன். இயக்குனர் சேரன் அவர்கள் திரையுலகில் மட்டுமல்ல இயல்பான வாழ்க்கையிலும் சிறந்தவர் என்று இந்த பிக் பாஸ் வீட்டில் நிரூபித்துவிட்டார்.

-விளம்பரம்-

இயக்குனர் ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். இவர் தன்னுடைய படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். சேரன் அவர்கள் கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதற்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. பின்னர் பிக்பாஸ் வீட்டிற்கு சேரனை என்கரேஜ் செய்து அனுப்பி வைத்தது விஜய் சேதுபதி தான் என்று ஒரு எபிசோடில் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகம். ஹீரோ யாருனு தெரிஞ்சா ஷாக்காவீங்க.

- Advertisement -

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ஒரு நெருக்கம் ஏற்படும் அதனால் நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்று விஜய் சேதுபதி கூறியதாக சொன்னார். அதன் பின் தான் இவர் பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டாராம். இவர் சினிமாவில் படங்கள் இயக்கி பல வருடங்கள் ஆனது. தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் சேரன். கடந்த 12 ஆம் தேதி, அதாவது ரஜினியின் பிறந்தநாளன்று சேரன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் பலரும் சேரனுக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை லாஸ்லியா தான் அவரின் மகளாக இருந்து வந்தார். ஆனால், லாஸ்லியாவோ சேரனின் பிறந்தநாளுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. ஆனால், சேரன் பிறந்தநாளுக்கு சாக்ஷி, சேரனின் வீட்டிற்கே சென்று கேக் வெட்டி சேரனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட ஷெரின்,சாக்ஷி ஆகிய ரெண்டு பெரும் சேரனை சந்தித்து மகிழ்ந்து வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்தது தான். தீபாவளி பண்டிகையின் போது கூட இவர்கள் இருவரும் சேரன் வீட்டிற்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போதும் லாஸ்லியா ஒரு வாழ்த்து கூடசொல்ல வில்லை. இதனால் லாஸ்லியா நன்றி மறந்து விட்டார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement