பல்லியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட ஸ்டோரி- என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

0
648
AishwaryaRajesh
- Advertisement -

மானிட்டர் பல்லி பாலியல் வன்கொடுமை தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா காட்டில் மானிட்டர் பல்லியை வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு பிரபலங்கள் பலரும் பதிவிட்டுள்ள பதிவு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் கன்டோலி தேசிய பூங்கா பகுதிக்குள் 4 பேர் துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்காக சென்று இருந்தனர். அப்போது அவர்கள் கொங்கன் பகுதியில் இருந்த காட்டுக்குள் வேட்டை விலங்குகளை தேடி அலைந்தனர். ஆனால், அவர்களின் கண்ணில் மானிட்டர் வகையை சேர்ந்த பல்லி ஒன்று தென்பட்டது.

-விளம்பரம்-

உடனே மங்கேஷ், சந்தீப், ஜனார்தன், அக்‌ஷய் ஆகிய நான்கு பேரும் அந்த பள்ளியை பிடித்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் அந்த கொடூர செயலை தங்களுடைய மொபைல் போனிலும் வீடியோவாக எடுத்துள்ளனர். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் காட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் நான்கு பேரும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

- Advertisement -

பல்லியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்:

உடனடியாக வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து நான்கு பேரையும் விசாரித்தனர். பின் அவர்களிடமிருந்த மொபைல் போனை சோதித்துப் பார்த்தபோது அவர்கள் பல்லியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல்லி பெங்கால் மானிட்டர் இனத்தை சேர்ந்தது.

வனத்துறை அதிகாரிகள் கூறியது:

இந்த வகை பல்லி பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்படி பல்லியை கூட விட்டுவைக்காமல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சோசியல் மீடியாவில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து பலரும் இது தொடர்பாக கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்ட பதிவு:

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், ஒருவேளை பல்லி குட்டையான ஆடைகளை அணிந்து இருந்ததாக நான் நினைக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இவரை தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய் படத்தின் கதாநாயகி தேஜஸ்வினி இன்ஸ்டாவில் கூறியிருப்பது, பள்ளி இரவு நேரத்தில் வெளியே வந்ததா? குட்டையான துணிகளை அணிந்து இருந்ததா?

தேஜஸ்வினி பதிவிட்ட பதிவு:

நிறைய தோல் தெரிந்ததா? குடிபோதையில் இருந்ததா? இந்த உலகம் பாதிக்கப்பட்டவரை எப்படி குற்றம் சொல்ல போகிறது என்பதை அறிய காத்து கொண்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி பிரபலங்கள் பலரும் மகாராஷ்டிரா பல்லியின் பாலியல் வன்கொடுமை குறித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது இது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement