ஒரு பெரிய இயக்குனரிடம் அப்படி சொன்னதால 3 வருஷம் வாய்ப்பு கிடைக்கவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்.

0
4067
aiswaryarajesh
- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

-விளம்பரம்-

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் பல படங்களில்நடித்துள்ளார். ஆனால், “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்கள் தான் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

- Advertisement -

தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘காக்கா முட்டை’ படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதை கூட பெற்றிருந்தார். சமீபத்தில் இவரரது நடிப்பில் வெளியாகியுள்ள “வட சென்னை” படத்திலும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷ், தனது தனிப்பட்ட வாழ்கை குறித்தும், சினிமா வாழ்கை குறித்தும் பேசியுள்ளார்.

அதில், என்னுடைய பயணம் வலி, வெற்றி, சந்தோஷம், காதல்னு எல்லாமே கலந்த கலவைதான். காதல் இல்லாத பயணம் நல்ல பயணமா இருக்காது.சென்னையில் ஹவுஸிங் போர்டு ஏரியாவுல பிறந்து வளர்ந்த லோயர் மிடில் கிளாஸ் பொண்ணு நான். ஆரம்பத்தில் சீரியல் வாய்ப்பு வந்தது. ஒரு நாளுக்கு 1,500 ரூபாய் தருவாங்க. ஆனா, மாசத்துல ஆறு நாள்கள்தான் வேலை இருக்கும். என் அம்மாகிட்ட, ‘சீரியல்ல லீட் ரோல் பண்றவங்களுக்கு 20- 25,000 ரூபாய் கொடுக்குறாங்க. நாம என்ன பண்றது?’னு கேட்டேன். அம்மாதான் ‘சினிமாவுல அதிக சம்பளம் கிடைக்கும். மக்களுக்கு நாம நடிக்கிற படம் நல்லா ஓடிடுச்சுன்னா இன்னும் அதிக சம்பளம் கிடைக்கும்’னு சொன்னாங்க. அப்படித்தான் சினிமா வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். 

-விளம்பரம்-

சினிமாவில் பாலியல் தொந்தரவு மட்டுமல்ல என் நிறம், என் பர்சனாலிட்டினு எனக்கு நிறைய தடைகள் இருந்தன. எனக்கு ஹீரோயின்கள் எல்லாம் டிரஸ் பண்ற மாதிரி பண்ணத் தெரியாது. நான் தமிழ் பேசுறேன்னு கூட என்னை அவங்க தவிர்த்திருக்கலாம். என் லுக், நிறம், பர்சனாலிட்டினு என் மேல நிறைய விமர்சனம் இருந்தன. அதே போல ஒரு பெரிய இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டு சென்று இருந்தேன்  ‘ஒரு ரோல் கொடுக்கிறோம். காமெடியனுக்கு ஜோடியாக நடிக்க சொன்னாங்க. எனக்கு லீட் ரோல் அல்லது முக்கியமான ரோல் நடிக்கணு என்று சொன்னேன்.அதன் பின்னர் , எனக்குமூன்று வருஷத்துக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கலை.

Advertisement