அந்த ரோல் ராஷ்மிகாவை விட எனக்கு தான் பொருத்தமாக இருக்கும் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்

0
2240
rashmika
- Advertisement -

ராஷ்மிகாவை விட அந்த கதாபாத்திரம் எனக்கு தான் பொருத்தமாக இருக்கும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும், கனா படம் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீப காலமாக இவர் பெண் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருந்த படம் “டிரைவர் ஜமுனா”. வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் 18 ரீல்ஸ் நிறுவனத்தின் எஸ்பி சௌத்ரி இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணம்:

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி டிரைவராக நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்த “ரன் பேபி ரன்” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஆனால், அது ஒரு சிறிய கதாபாத்திரம் தான். அதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த “சொப்பன சுந்தரி” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருக்கிறார். இப்படத்தை எஸ்.எஸ்.சார்லஸ் இயக்கி இருக்கிறார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

ஃபர்ஹானா படம்:

தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஃபர்ஹானா. தன்னுடைய குழந்தைகளுக்காக மத கட்டுப்பாட்டுகளை எல்லாம் கடந்து வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. இந்த படத்திற்கு எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பெண்கள் முன்னேற்றத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருப்பதால் பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டி:

இருந்தாலும், ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தை மேற்கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் ஐஸ்வர்யாவிற்கு மிரட்டலும் விடுத்தும் இருக்கின்றன. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஃபர்ஹானா திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய பேட்டிகள் கொடுத்திருந்தார். அதில் அவர், நான் ஒரு நல்ல தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன்.

rashmika

ராஷ்மிகா மந்தனா குறித்து சொன்னது:

நான் நடித்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படம் பெரியளவு வெற்றியை கொடுக்கவில்லை. எனக்கு தெலுங்கு சினிமா ரொம்ப பிடிக்கும். மேலும், புஷ்பா படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சயம் நான் நடித்திருப்பேன். அந்த படத்தில் இடம் பெற்ற ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா ரொம்ப அருமையாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ராஷ்மிகாவை விட எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement