இவங்க எல்லாம் சபரி மலைக்கு போக கூடாது எந்த கடவுளும் சொல்லல – விவாதத்திற்கு உள்ளான ஐஸ்வர்யா ராஜேஷின் பேச்சி.

0
518
AishwaryaRajesh
- Advertisement -

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆண் பெண் இருவரும் கடவுளுக்கு முன்னர் சமம் தான் என்று கூறி உதாரணத்தை கூறியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவராக திகழ்கிறார் . இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் கனா படம் மூலம் தான் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் .

- Advertisement -

டிரைவர் ஜமுனா:

இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் ஐஸ்வர்யா பிரபலமான நடிகையாக திகழ்கிறார். சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லி இயக்கியிருக்கிறார். இப்படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மலையாளம் ரீமேக் படம் :

இந்த நிலையில் தான் இவர் தற்போது மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற “தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை ஐவரியா ராஜேஷ் மற்றும் நடிகர் ராகுல் ரவீந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெர்ரி சில்வெர்ஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான் :

இப்படி பட்ட நிலையில் தான் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. ஐஸ்வர்யா அந்த பேட்டியில் பேசுகையில் “கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான், ஆண் பெண் வித்தியாசம் கடவுளுக்கு தெரியாது. என்னுடைய கோவிலுக்குள் இவர்கள் மட்டும் தான் வர வரவேண்டும், இவர்கள் வரக்கூடாது என எந்த கடவுளும் சொல்லவில்லை. அதனால் சில தான் உருவாக்கினார்கள். சபரிமலை மட்டுமல்ல எந்த கோழிலுக்குள்ளும் இவர்கள் வரக்கூடாது என்று கடவுள் கட்டளை பிறப்பிக்கவில்லை.

தீட்டு என ஓன்று கிடையாது :

இது சாப்பிட கூடாது, அது சாப்பிட்டால் தீட்டு என எந்த கடவுளும் சொல்லவில்லை. இவற்றையெல்லாம் நாம் தான் உருவாக்கினோம். இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. பெண்களுக்கு மாதவிடால் நேரங்களில் இதனை செய்யக்கூடாது, கோவிலுக்குள் வரக்கூடாது என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. இதனை உருவாக்கியது மக்களாகிய நாம் தான். இதனை எப்போதும் நான் நம்புவதும் இல்லை என்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Advertisement