‘சில நேரங்களில் உங்களுக்கு இது மட்டும் தான் தேவை’ – தன் மகன்கள் குறித்து ஐஸ்வர்யா பதிவிட்ட பதிவு.

0
698
aiswarya
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் இருந்து வந்தாலும் அதில் ஒரு சிலர்கள் மட்டுமே இறுதிவரை நன்றாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்துவருவதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-
Aishwarya

சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று தனுஷ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர். மேலும், ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரி ராஜா தரப்பிலிருந்து தனுஷ் ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

- Advertisement -

மீண்டும் சேரப் போவதாக எதிர்பார்ப்பு :

கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூட சமீபத்தில் இவர்கள் இருவரும் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தனுஷ் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இருவரும் கேரியரில் பிஸி :

இப்படி தொடர்ந்து தனுஷ் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தனுஷ் அவர்கள் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் ஹைதராபாத்தில் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

சந்திக்காமல் சென்ற தனுஷ் – ஐஸ்வர்யா :

இந்த மியூசிக் ஆல்பத்தை ஐதராபாத்தில் தான் இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார்கள். ஆனால், இருவரும் சந்தித்துகொள்ளவே இல்லையாம். அதே போல நண்பர் ஒருவரின் பார்ட்டியில் தனுஷ் கலந்துகொண்ட போது அங்கு எதிர்பாராத வகையில் ஐஸ்வர்யாவை சந்தித்திருக்கிறார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது ஒருவரை ஒருவர் கடந்து பேசாமல் சென்றிருக்கிறார்கள்.

மகன்கள் குறித்து ஐஸ்வர்யா :

மேலும், இந்த பார்ட்டியில் தனுஷ் – ஐஸ்வர்யா கலந்து கொண்டால் இருவரும் மீண்டும் மனம் விட்டு பேசி இணைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்த்த நண்பர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று தான் சொல்லணும். இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘சில நேரங்களில் என் மகன்களின் அணைப்பு மட்டும் தான் தேவைப்படுகிறது’ என்று பதிவிட்டு இருக்குறார்.

Advertisement