தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார்.
இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவும் இயக்குனர் ஆவார். மேலும், இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து:
மேலும், 18 ஆண்டு திருமண வாழ்வில் இருந்து இருவரும் பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக உள்ளது. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பிறகு:
அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனுஷ் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து தனுஷ் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
மாறன் படம் பற்றிய தகவல்:
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், மகேந்திரன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனிடையியே இந்த படம் ரிலீஸ் செய்தியை தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
தனுஷ் டீவ்ட்டை பார்த்து ஐஸ்வர்யா செய்தது:
அந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக்ஸ் செய்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக உற்சாகமடைந்துள்ளனர். மேலும், ரஜினியின் பேச்சுவார்த்தையை அடுத்து தனுசுடன் இணைய ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் தனுஷ் தான் அதற்கு ஒத்து வரவில்லை என்பதும் தெரிந்து ஒன்று. இந்த நிலையில் தனுஷ் டீவ்ட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக்ஸ் செய்தது அவர்கள் இணைவதற்காக நம்பிக்கை துளிர்க்க செய்து இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.