‘தன்னை தோழி என்று கூறிய தனுஷ்’ ஐஸ்வர்யா என்ன சொல்லியுள்ளார் பாருங்க – வைரலாகும் பதிவு.

0
482
Dhanush
- Advertisement -

சமீபத்தில் 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-84.png

அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனுஷ் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து தனுஷ் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

தனுஷின் மாறன் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், மகேந்திரன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

This image has an empty alt attribute; its file name is image-85.png

தனுஷ் பதிவை லைக் செய்த் ஐஸ்வர்யா :

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனிடையியே இந்த படம் ரிலீஸ் செய்தியை தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக்ஸ் செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பயணி என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ள அவர், நேற்று அதனை வெளியிட்டார். தமிழில் அனிரூத் இசையமைத்து பாடியுள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-362-1024x586.jpg

ஐஸ்வர்யாவின் புதிய ஆல்பம் :

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய பிரபலங்களான அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு உள்ளிட்ட ஸ்டார் நடிகர்கள் ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பத்தை அந்தந்த மொழிகளில் ரிலீஸ் செய்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் தனுஷூம் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பத்தை பகிர்ந்து இருந்தார்.

தோழி என்று குறிப்பிட்ட தனுஷ் :

அதில் ‘தோழி’ ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பம் வெற்றியடைய வாழ்த்துகள் என கூறி ஆல்பத்தை பகிர்ந்து இருந்தார். தனுஷின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் அதற்குள் ஐஸ்வ்ர்யா, தோழியாகமாறிவிட்டாரா என்று கமன்ட் போட்டு வந்தனர். இந்த நிலையில் தனுஷின் இந்த பதிவிற்கு ரிப்ளை செய்துள்ள ஐஸ்வர்யா ‘Thank you Dhanush….Godspeed’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement