2வது திருமணம்,மகளுடன் சண்டையிட்டு வெளிநாடு கிளம்பிய ரஜினி ? ஐஸ்வர்யா கொடுத்த பதிலடி.

0
2480
Rajini
- Advertisement -

இரண்டாவது திருமணம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்திருக்கும் பதிலடி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் இருந்து வந்தாலும் அதில் ஒரு சிலர்கள் மட்டுமே இறுதிவரை நன்றாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் 18 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து இருந்தவர்கள் தனுஷ்-ஐஸ்வர்யா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள். மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:

ஆனால், ஒரு பலனும் இல்லை. மேலும், ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்ய வில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் அவர்கள் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

தனுஷ்-ஐஸ்வர்யா திரைப்பயணம்:

இந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இருந்தது. இதனை அடுத்து தனுஷ் அவர்கள் கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் சில படங்களில் தனுஷ் கமிட் ஆகியும் இருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, தனுஷ்- ஐஸ்வர்யா ஆகியோரின் மகன்கள் ஐஸ்வர்யா உடனே இருக்கின்றனர்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம்:

இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்ததால் ரிலாக்ஸாக இருப்பதற்கு சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மாலத்தீவு சென்றிருந்தார். இதற்கு காரணம், ஐஸ்வர்யா தன்னிடம் உதவி இயக்குனராக இருக்கும் ஒருவரை தான் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தன்னுடைய தந்தையிடம் கேட்டிருக்கிறார்.

ஐஸ்வர்யா பதிவு:

இதனால் கோபப்பட்ட ரஜினிகாந்த் தன்னுடைய மகளைத் திட்டிவிட்டு மாலத்தீவு கிளம்பிவிட்டார் என்றெல்லாம் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐஸ்வர்யா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், தன் அப்பா நடித்த ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் விழா முடிவடைந்ததும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் பகிர்ந்து இருக்கிறார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து வரும் செய்திகள் எல்லாம் வதந்தி என்றும் உறுதியாகி இருக்கிறது.

Advertisement