தனுஷ் அண்ணன் செல்வராகவன் பிறந்தநாளில் ஐஸ்வர்யா போட்ட வரிகள் – மீண்டும் தனுஷுடன் சேருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை.

0
303
dhanush
- Advertisement -

கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த சர்ச்சைகள் தான் அதிகம் போய்க் கொண்டிருக்கின்றது. சமந்தா – நாக சைதன்யா விவகாரத்து பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவும் பிரபலமான இயக்குனர் ஆவார். மேலும், இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

- Advertisement -

முடிவுக்கு வந்த 18 ஆண்டு உறவு :

இப்படி இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.மேலும், 18 ஆண்டு திருமண வாழ்வில் இருந்து இருவரும் பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக உள்ளது. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர்.

சட்ட ரீதியாக பிரியாத தனுஷ் :

அதோடு தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் நடுவில் என்ன தனுஷ்- என்று தெரியாமல் பல விதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவித்ததில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் அவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகள் செய்து வருகின்றனர்.சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

தன் மூத்தாருக்கு வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா :

ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று தனுஷ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர். அதே போல இன்னமும் தன் சமூக வலைதள பக்கத்தில் தன் பெயரை ஐஸ்வர்யா தனுஷ் என்றே வைத்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் செல்வராகவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவின் பதிவு :

தனுஷ்ஷின் சகோதரரும் இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள ஐஸ்வர்யா என்னடைய குரு, நண்பன் மற்றும் எனக்கு அப்பா போன்றவர் செல்வராகவன் என்றும் அவர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு இருந்தாலும் தனுஷ் அண்ணன் மேல் ஐஸ்வர்யா வைத்திருக்கும் மரியாதையை பார்த்து ரசிகர்கள் பலர் தனுஷுடன் விரைவில் ஐஸ்வர்யா இணைவார் என்று நம்பிக்கை வைத்து இருக்கின்றனர்.

Advertisement