ஓவியாவை தொடர்ந்து சர்ச்சையை கிளம்பியுள்ள ஐஸ்வர்யாவின் புதிய படத்தின் போஸ்டர்.!

0
1138
Aari-Aiswarya
- Advertisement -

கடந்த சில காலமாக தமிழ் சினிமாவில் எண்ணெற்ற இரட்டை வசனங்கள் கொண்ட படங்கள் வெளியாகி வருகிறது. இந்த கலாச்சாரத்திற்கு துவக்கப்புள்ளியாக தொடங்கிய த்ரிஷா இல்லனா நயன்தாரா தொடங்கி கடைசியாக வெளிவந்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ வரை பல அடல்ட் காமெடி படங்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

சமீபத்தில் ஓவியா நடிப்பில் வெளியாக இருக்கும் 90 ml படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில் இடம் பெற்ற ஆபாச காட்சிகளும், இரட்டை வசனங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஐஸ்வர்யா தற்போது மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா’ படத்திலும்நெடுஞ்சாலை ஆரியுடன் ‘அலேகா’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

அந்த போஸ்டரில் படுக்கையறையில் மோசமான கோலத்தில் இருப்பதை குறிப்பிடம் புகைப்படம் இடம்பெற்றியிருந்தது. இதனால் இந்த போஸ்டர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த போஸ்டர் குறித்து விளக்கமளித்துள்ள இந்த படத்தின் ஹீரோ ஆரி, இந்த படம் காம காதல் கதை அல்ல, புனிதமான காதல் கதை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement