பாலியல் தொல்லைக்கு உள்ளான பிக் பாஸ் ஐஸ்வர்யா ?சின்மயிக்கு ஆதரவு ..!

0
280
Aiswarya

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.

Aiswarya

அதே போல நடிகை சின்மையின் இந்த #metoo இயக்கத்திற்கு நடிகைகள் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், ஆண்ட்ரியா போன்ற பல்வேறு நடிகைகளும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், பல நடிகைகளும் #metoo வை பயன்படுத்தி தங்களுக்கு சினிமா துறையில் ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து நடிகை ஐஸ்வர்யா தத்தா #metoo வை பயன்படுத்தி சின்மைக்கு ஆதரவாக ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

சமீத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா தத்தா, ஒரு பெண்ணாகவும் நடிகராகவும் நான் முழுவதுமாக #metoo வை நான் ஆதரிக்கிறேன். சின்மயி மற்றும் சமந்தா இருவருமே ஒரு சக்தி வாய்ந்த பெண்களாக இருக்கின்றனர்,உங்கள் இருவரையும் நான் பின்பற்றுகிறேன். ஒன்றாக கைகோர்த்து சினிமா துறையை ஒரு பாதுகாப்பான இடமாக மாற்றிவோம் என்று பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா, சின்மைக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறாரா அல்லது ஐவர்யாவிற்கும் சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் இருந்துள்ளதா என்று சந்தேகம் எழுகிறது. ஏனெனில் சினிமா துறை பொறுத்த வரை முன்னணி நடிகைகளை விட ஐஸ்வர்யா தத்தா போன்ற பிரபல மில்லாத நடிகைகள் தான் பட வைப்புகளுகாக மிகவும் அதிகமான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, ஐவர்யா தத்தாவும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.