நான் தான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா ? ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன ‘நச்’ பதில்.

0
500
nayanthara
- Advertisement -

நயன்தாரா போல் நடிக்கும் எண்ணம் இல்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டு திகழ்கிறார் . இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் கனா படம் மூலம் தான் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் .

- Advertisement -

டிரைவர் ஜமுனா:

இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் ஐஸ்வர்யா பிரபலமான நடிகையாக திகழ்கிறார். சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லி இயக்கியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டி:

ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பட குழு பேட்டி அளித்து இருக்கிறது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி இருந்தது, க/பெ ரணசிங்கம் படத்தை முடித்துவிட்டு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்கலாம் என்று தான் திட்டமிட்டு இருந்தேன். அப்போது வத்திக்குச்சி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் டிரைவர் ஜமுனா படத்தின் கதையை என்னிடம் சொன்னார்.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

பெண் டாக்ஸி ஓட்டுனரின் கதையை மையப்படுத்திய படம். கதை கேட்கும் போது எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. நான் சமீபத்தில் நடித்த மூன்று படங்களுமே ஓடிடியில் வெளியாகி இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஓடிடியில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. திரையரங்களில் அதற்கான வரவேற்பு தற்போது குறைந்து இருக்கிறது. இருந்தாலும், வித்தியாசமான தரமான திரைப்படங்களை ரசிகர்கள் ஆதரிப்பது குறையவில்லை.

நயன்தாரா குறித்து சொன்னது:

அது போன்ற ஒரு நல்ல திரைப்படம் தான் டிரைவர் ஜமுனா. இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. நம்பிக்கையுடன் வந்து பார்க்கலாம். கார் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் இந்த படத்தின் ஒரு காட்சியை தவிர மற்ற எல்லா ஸ்டாண்ட் காட்சிகளிலும் டூப் போடாமலே நானே நடித்திருக்கிறேன். அதேபோல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாணியில் கதாநாயகி முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்கும் விருப்பமில்லை. எல்லா படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். நயன்தாரா ஒரு பெரிய நடிகை. நான் இப்போதுதான் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வளர்ந்து இருக்கிறேன் என்று பெருந்தன்மையாக பேசியிருக்கிறார்.

Advertisement