கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. தமிழில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நாயகியாக நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஆனால், சமீப காலமாக இவர் படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. பின் கடைசியாக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த தீராக் காதல் படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நாயர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
கேப்டன் பற்றி பேசியதும் கைகூப்பி ‘வேற பேசலாமே’ என சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடுத்தடுத்து இடியாய் விழுந்த கேள்விகள்#Chennai #Tambaram #AishwaryaRajesh #NewsTamil24x7 pic.twitter.com/NAW7TW5KaW
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) January 3, 2024
இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா சென்றிருக்கிறார். அங்கு பத்திரிக்கையாளர்கள் ஐஸ்வர்யாவை பேட்டி எடுத்திருக்கிறார்கள்.
அப்போது அவரிடம் விஜயகாந்த் இறப்பு குறித்து கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், இது கடை திறப்பு விழா. இது சம்பந்தப்பட்ட கேள்வி கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். இருந்தாலும், செய்தியாளர்கள் விஜயகாந்த் உடைய இறப்பு குறித்து கேட்டுக் கொண்டிருந்ததால் ஐஸ்வர்யா கைகூப்பி கும்பிட்டு எனக்கு வருத்தம் தான்.அந்த சமயத்தில் நான் இல்லை. சூட்டிங்காக நான் பாண்டிச்சேரியில் இருந்தேன். என்னால் வர முடியவில்லை. அவர் இறந்தது வருத்தம் தான் என்று கூறியிருக்கிறார்.
View this post on Instagram
பின் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜய்காந்தின் பெயர் வைப்பது குறித்து கேட்டதற்கு எல்லோருடைய முடிவு தான் என்னுடைய முடிவும். எல்லோருக்கும் சம்பந்தம் என்றால் எனக்கும் சம்மதம். பின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் பலரும் உதவி செய்துள்ளார்கள்.குறிப்பாக KPY பாலா உதவி செய்திருக்கிறார். ஆனால், நடிகைகள் எதுவுமே செய்வதில்லை. இது குறித்து உங்களுடைய கருத்து என்று கேட்டதற்கு, எல்லோருமே உதவி செய்வது நல்ல விஷயம் தான்.
உதவி செய்வதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நானும் செய்திருக்கிறேன். அதைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. வெளியில் சொன்னாலும் நல்லது தான். இதை பார்த்து இளம் தலைமுறைகள் உதவுவார்கள். கே பி ஒய் பாலா செய்தது பாராட்டுக்குரிய விஷயம்தான் என்று என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்திலும் வைரலானது.

இப்படி ஒரு நிலையில் இன்று விஜயகாந்தின் கல்லறைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை தொடர்ந்து பேசிய அவர் 'அவர் இறந்த போது நான் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் இருந்ததால் அவரது இறப்பிற்கு நேரில் வர முடியவில்லை. விஜயகாந்தின் இரு மனைகளும் எனக்கு நல்ல நன்பர்கள். நான் விஜயகாந்த் சாரை சந்திக்க பல முறை அவர்களிடம் கேட்டேன். ஆனால், என்னால் அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.






