தனது 30வது பிறந்தநாளை ஐஸ்வர்யா ராஜேஷ் யாருடன் கொண்டாடினார் தெரியுமா ?

0
23197
aiswarya-rajesh

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். இவருக்கு இந்த கனா படம் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்

- Advertisement -

இந்நிலையில் நடிகை-ஐஸ்வர்யா-ராஜேஷ் அவர்கள் தனது பிறந்த நாளை குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்து உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தற்போது தமிழில் வானம் கொட்டட்டும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடிக்கிறார்.

இதையும் பாருங்க : தர்பார் படத்தில் வில்லன் குரலை எங்கயோ கேட்ட மாதிரி இருந்துச்சா. அது இந்த நடிகரின் குரல் தான்.

மேலும், இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா லவ்வர் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார் என்று தெரிய வந்து உள்ளது. அதோடு விஜய் தேவர்கொண்டாவுக்கு மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரேசா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றார்கள். இயக்குனர் க்ரந்தி மாதவ் தான் இந்த படத்தின் கதை, வசனம் எழுத்தாளர் ஆவார். இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக இருக்க போகிறது.

-விளம்பரம்-
குழந்தைகளுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

அதுமட்டும் இல்லாமல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் நானியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் பிறந்தநாளை இன்று. இவருடைய பிறந்த நாளுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் குவித்த வண்ணம் இருந்தார்கள். இவர் ஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது 30 வது பிறந்தநாளை குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்து வருகிறார். மேலும், குழந்தைகளுடன் சிரித்து பேசி விளையாடி உள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது, அவர்களுடன் விளையாடியது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று பதிவிட்டு உள்ளார்.

Advertisement