ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையை பார்த்துள்ளீர்களா. அவரும் ஒரு நடிகர் தானாம்.

0
34840
Ayswarya-Rajesh
- Advertisement -

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். இந்த கனா படம் மூலம் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் மக்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த “நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

-விளம்பரம்-

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தந்தை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகை ஐஸ்வர்யாவின் தந்தை பெயர் ராஜேஷ். இவர் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் தெலுங்கு மொழியில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1983-ம் ஆண்டு இவர் நடிப்பில் வந்த ஆனந்த பைரவி திரைப்படம் மெகா சூப்பர் ஹிட்டானது. இவருடைய தாத்தா அமர்நாத்தும் பிரபலமான நடிகர் தான். இதேபோல இவருடைய அத்தை ஸ்ரீலட்சுமியும் தெலுங்கில் மிக பிரபலமான குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். குடும்பமே கலை குடும்பமாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை ரசிகர்கள் பார்த்துட்டு ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையா! என்று வியந்து போய் உள்ளார்கள். இவர் சினிமாவில் கொடிகட்டி பறந்த குடும்பத்திலிருந்து வந்தவர். ஆனாலும், இவர் இதுவரை எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது திறமையை மூலமாகவே முன்னேறி வருகிறார். தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றி நடைப் போட்டுக் கொண்டு இருக்கும் வானம் கொட்டட்டும் என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ராதிகா, சரத்குமார், சாந்தனு என்று பலர் நடித்து உள்ளார்கள்.

Image result for aishwarya rajesh mother

இதனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா தான் ஹீரோவாக நடிக்கிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் நிர்மல் குமார் படத்திலும், டக் ஜெகதீஷ் என்ற படத்தில் நானியுடன் இணைந்தும் நடித்திருக்கிறார். இப்படி தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தி வருகிறார். அதோடு தற்போது நயன்தாராவிற்கு அடுத்து பட வாய்ப்புகளை அதிகமாக வைத்திருப்பது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement