டிரைவர் ஜமுனா பட நிகழ்ச்சியில் பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த சர்ரைஸ் பரிசு.

0
260
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் கனா படம் தான் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் .

- Advertisement -

டிரைவர் ஜமுனா:

இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மூலம் ஐஸ்வர்யா பிரபலமான நடிகையாக திகழ்கிறார். மேலும், சமீப காலமாக இவர் பெண் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் “டிரைவர் ஜமுனா” என்ற படத்தில் நடித்திருக்கிறார். வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் 18 ரீல்ஸ் நிறுவனத்தின் எஸ்பி சௌத்ரி தயாரித்திருக்கின்றனர்.

இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணா பிக் பாஸ் மணிகண்டன், ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி போன்றவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி டிரைவராக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக தனியார் ஊடகம் ஒன்றில் ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டும் பெண்களுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துரையாடியிருந்தார்.

-விளம்பரம்-

ஓட்டுனருக்கு கொடுத்த அதிர்ச்சி :

இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இருந்து 40தற்கும் மேற்பட்ட பெண் கால் டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டார். அதில் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து “டிரைவர் ஜமுனா” படக்குழு சார்பில் ஆட்டோ ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களிடம் ஓட்டுநராக பணியாற்றும் போது ஏற்பட்ட பல சுவாரஷ்யமான நிகழ்வுகளை பற்றி நடிகை ஐஷ்வர்யா ராஜேஷுடன் பகிர்ந்து கொண்டனர்.

பாராட்டும் நெட்டிசன்கள் :

மற்றவர்களை எண்ணாமல் தன்மேலே நம்பிக்கை வைத்து சொந்த உழைப்பின் மூலம் முன்னேறும் பெண்களுக்கு அடையாளமாக இந்த பரிசு இருந்தது என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். திரில்லர் கதையா மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த “டிரைவர் ஜமுனா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று வருகிறது.

Advertisement