கலெக்டர் வளாகத்திலேயே ரஜினி மகள் சூட்டிங்கில் ஆராஜம், சண்டையிட்ட பொது மக்கள் – கலெக்டர் காட்டிய அதிரடி.

0
449
- Advertisement -

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஷூட்டிங் எடுத்ததால் பொதுமக்கள் அவஸ்தை பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. கோலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டு காலமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

இவர் இயக்கிய 3, வை ராஜா வை போன்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இவர் தன் தந்தையை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஷூட்டிங் எடுத்ததால் பொதுமக்கள் அவஸ்தை பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இதனால் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடத்திய ஷூட்டிங்:

இதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட திரைப்பட குழுவினர் வந்திருந்தனர். இவர்களுடைய பாதுகாப்புக்காக பவுன்சர்களும் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகமாக குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது. இணை சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் பாதையில் இருந்த பெட்டிக்கடைகள் எல்லாம் அகற்றப்பட்டது. சூட்டிங் நடைபெறுவதால் பொதுமக்களும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர். அப்போது பொதுமக்கள் எல்லோரும் படப்பிடிப்பு காட்சிகள் எல்லாம் தங்களுடைய செல்போன்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.

படப்பிடிப்பு தளத்தில் நடந்து:

இதை பார்த்த பவுன்ஸர்கள் பொதுமக்களிடம் செல்போனை பறித்து அதில் பதிவாகியிருந்த புகைப்படங்கள் எல்லாம் அழித்து சண்டை போட்டிருந்தனர். இதனால் மக்களும் கோவம் அடைந்து பொது இடத்தில் ஷூட்டிங் நாடத்தினால் மக்கள் வரத்தான் செய்வார்கள் என்று அவர்களுடன் சண்டையிட்டனர். அதுமட்டுமில்லாமல் அத்துமீறி புகைப்படங்கள் வீடியோ எடுத்தால் செல்போன்களை பறிமுதல் செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்களும், பொது இடத்தில் படப்பிடிப்பு நடந்தால் நாங்கள் புகைப்படம் எடுக்கத்தான் செய்வோம். நீங்கள் இதற்கு தனியாக அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி கொள்ள வேண்டிய தானே என்று கோபமாக பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

பொதுமக்கள் பட்ட அவஸ்தை:

அதோடு வட்டாட்சியர் அலுவலக நுழைவுப் பாதையில் கயிறு கட்டி தடுப்புகள் எல்லாம் ஏற்படுத்தி பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத வகையில் பவுன்சர்கள் இருந்தார்கள். இதனால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விடுதிகளுக்கு செல்ல முடியாமல் பள்ளி மாணவிகளும் தவித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் இ சேவை மையத்தை தேடி வந்த மக்களும், ஊழியர்களும் அவஸ்தை பட்டு இருக்கின்றன. அதேபோல் வட்டாட்சியர் அலுவலக கதவுகளை மூட முயன்றதால் உழவர் சந்தைக்கு சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு:

இந்நிலையில் இதை அறிந்த மாவட்ட ஆட்சியர், பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகள், கோயில் விழா மற்றும் படப்பிடிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தும் போது மக்களுடைய அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடத்திய படப்பிடிப்பில் பொதுமக்கள் பலவகையில் இடையூறுகளை சந்தித்து இருக்கிறார்கள். இது சட்ட விதிகளை மீறிய செயல். அதுமட்டுமில்லாமல் வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகையை மாற்றி இருப்பதும் தவறான செயல். மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்களும் வேண்டுகோள் வைத்திருக்கின்றார். ஆகவே, படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement