பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படமாக எடுக்க இருப்பதாக தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், ரஜினிகாந்த்துக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர். இவர் தனுஷ் நடித்த 3, கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியவர்.
தற்போது இவர் ‘ஓ சாதிசால்’ என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே இவர் 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார்.
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:
இதனிடையே தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியருக்கு யாத்ரா , தனுஷ்- என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் இருவரும் தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக இருக்கிறது. இவர்களின் இந்த பிரிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
ஐஸ்வர்யா ஆல்பம் சாங்:
பிரிவிற்கு பின் தனுஷ் அவர்கள் வாத்தி, நானே வருவேன்,sir போன்ற பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார். அதே போல் ஐஸ்வர்யாவும் தனிக்குழு உடன் இயக்கும் இசை ஆல்பத்தில் பிசியாக வேலை செய்து இருந்தார். இடையில் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்த முசாபிர் எனும் மியூசிக் வீடியோ வெளியாகி இருந்தது. இது தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் வெளியாகியிருந்தது.
சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படம்:
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இரண்டு மகன்களுடன் சேர்ந்து ஐபிஎல் பிளே-ஆப் போட்டிகளை பார்ப்பதற்காக கொல்கத்தா சென்றிருந்தார். அப்போது பிசிசிஐ சவுரவ் கங்குலியின் இரவு டின்னருக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். இந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏன்னா, ஏற்கனவே சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
ஐஸ்வர்யா இயக்கும் படம்:
ஆகையால், இந்த சந்திப்பின் மூலம் இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆனால், இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் ஏற்கனவே இயக்கி வரும் பாலிவுட் படத்தை முடித்தவுடன் இயக்குவது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த படத்தில் ரித்திக் ரோஷன், ரன்பீர் கபூர், சித்தார்த் மல்கோத்ரா உட்பட ஒரு சில பிரபலங்கள் கங்குலி வேடத்தில் நடிக்க பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.