வலிமை படத்திற்காக 100 அடி ரிஸ்க்கை எடுத்த அஜித். அடங்காமாடீங்களா தல என்று புலம்பும் ரசிகர்கள்.

0
2061
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். தற்போது தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து அதிர்ச்சியிடும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தல ரசிகர்கள் எல்லாம் மிகுந்த கவலையில் உள்ளார்கள். இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார்.

-விளம்பரம்-

இந்த வலிமை படத்திற்கான பூஜைகள் எல்லாம் போடப்பட்டு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள் என தெரிய வந்து உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷியிலும், உற்சாகத்திலும் உள்ளனர். தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகியும், பிற நடிகர்கள் குறித்தும் எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். கேங் லீடர் படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயா தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஆனால், இது குறித்து அதிகாரப் பூர்வமாக இன்னும் எந்த தகவலும் வரவில்லை. சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்கள்.

அதே போல நடிகர் அஜித் குமார் அவர்கள் எப்போதும் தான் நடிக்கும் படங்களில் பைக் ஸ்டண்ட் மற்றும் சில சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். அது போல இந்த வலிமை படத்தில் அவர் ஒரு ரிஸ்க் எடுத்து உள்ளார். அது என்னவென்றால் ஒரு ஸ்டண்ட் காட்சியில் அஜித் குமாரே நடித்திருக்கிறாராம். அது மேலிருந்து 100 அடி உயரத்திலிருந்து டூப் இல்லாமல் குதித்து உள்ள ஒரு ஸ்டண்ட் காட்சியில் அஜித் நடித்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் எல்லாம் அதிர்ச்சியில் உள்ளார்கள். இந்த திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர் ரசிகர்கள். வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். மேலும், இந்த வலிமை படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

Advertisement