ஹைதராபாத், விசாகப்பட்டினம் – 30,000 கிலோ மீட்டர் சைக்கிளிங் – அஜித்தின் சைக்கிளிங் பார்ட்னர் சுரேஷ் போட்ட பதிவு.

0
1580
ajith

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். தற்போது தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து ஒரு செமயான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தல ரசிகர்கள் எல்லாம் மிகுந்த கவலையில் உள்ளார்கள். இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இந்த படத்தின் பணிகள் எப்போதோ நிறைவடைந்த நிலையில் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித் சைக்கிளில் பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதே போல ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் பல மாதங்களுக்கு முன் வைரலானது. அதில் தல அஜித் அவர்கள் வலிமை படத்தின் சூட்டிங்கிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு சைக்கிளிலேயே சென்று இருக்கிறார் எனவும், அதுவும் 600 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து கொண்டே சென்று இருக்கிறார் என்றும் கூறிவந்தனர் .

இதையும் பாருங்க : வெள்ளை உடையில் புகைப்படத்தை வெளியிட்ட கிரண் – உள்ளாடையை வர்ணிக்கும் நெட்டிசன்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தானா இது என்று பலரும் குழம்பி வந்த நிலையில், அஜித்துடன் சைக்கிளிங் சென்றுள்ள சுரேஷ் என்பவர் அஜித்தின் இந்த பயணம் பற்றி பதிவிட்டுள்ளார். அதில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக அஜித்துடன் இணைந்து தான் சைக்கிளிங் செய்வதாகவும் தல அஜித் தான் பார்த்ததில்லையே கடுமையான போராளி என்றும் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு சைக்கிளிங் என்றும் சுரேஷ் தனது பதிவில் கூறியுள்ளார்.

மேலும், அஜித்தின் இந்த பயணம் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அஜித் இந்தியாவில் ஹைதராபாத், விசாகப்பட்டினம், கோயமுத்தூர், திருப்பதி மற்றும் சில வடமாநில பகுதிகளில் சைக்கிளிங் செய்வார் இதுவரை அஜித்துடன் இணைந்து தாம் 30 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளிங் செய்திருக்கிறேன். இன்னும் சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் ஆயிரமாயிரம் தொலைவுகள் கடக்க வேண்டும் என்றும் சுரேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement