அஜித் 59 படத்தின் கதை இது தான்..!நீண்ட வருடங்கள் கழித்து அஜித் எடுக்கும் கதாபாத்திரம்..!

0
645
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒரு பாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையும் உள்ளதாம். அந்த படத்தின் கதையில் தான் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆனால், சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் இயக்குனர் வினோத் குமார். இருப்பினும் ‘பிங்க்’ படத்தை தழுவியே இந்த படம் உருவாக உள்ளது என்று கூறப்படுகிறது.

அதுபோக இந்த படத்தில் நடிகர் அஜித் சமூக அக்கறை கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் அஜித் பெண்களுக்காக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

-விளம்பரம்-
Advertisement