மீண்டும் போலீஸ் அதிகாரியாக அசத்த வரும் அஜித்.! வெளியான சூப்பர் தகவல்.!

0
741
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார் மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-
Related image

இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். மேலும், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், போன்ற பல்வேறு நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிகே படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதையும் படியுங்க : ல்யா மானஸா பிறந்தநாளுக்கு சஞ்சீவ் எத்தனை பரிசு கொடுத்துள்ளார் பாருங்க.!

- Advertisement -

அதேபோல இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் வினோத் குமார் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே உறுதியானது. இந்த நிலையில் அந்த படத்தை பற்றிய அறிவிப்பு கசிந்துள்ளது.

Image result for உடலை குறைத்த அஜித்

அஜித் நடிக்கவுள்ள அந்த படத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடிகர் அஜித் உடல் எடை குறைந்து காணப்பட்ட சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது எனவே போலீஸ் கெட்டப்பிற்காக தான் அஜித் உடலை குறைத்து வருகிறார் என்ற எண்ணமும் தோன்றுகிறது.

-விளம்பரம்-
Advertisement