‘நான் நல்ல டான்ஸரா இல்லாமல் இருக்கலாம். ஆனா’ – ப்ளூ சட்டையின் பாடி ஷேமிங் விமர்சனத்துக்கு அன்றே பதிலடி கொடுத்த அஜித்.

0
546
ajith
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வெளிவந்த வலிமை படம் கோடிகளில் வசூலை குவித்து வருகிறது. கடந்த வாரம் தான் வலிமை படம் ரிலீசாகி இருந்தது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

அதோடு ‘வலிமை’ படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அஜித்தின் ‘வலிமை’ படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து இருக்கிறார். இவரது விமர்சனம் தான் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வலிமை படத்தை கழுவி ஊற்றியது மட்டுமல்லாமல், அஜித்திற்கு மூஞ்சில் தொப்பை இருக்கு. படத்தை தயாரித்த போனி கபூர் தான் ஒரு சேட் என்றால் அஜித் பஜன் லால் சேட்டு மாதிரி கொழுக் முழுக்னு இருக்கார்.

- Advertisement -

அஜித்தை செய்த உருவ கேலி :

டான்ஸ் ஆடவே கஷ்டப்படுறார் என்று அஜித்தையும் உருவ கேலி செய்துள்ளார். இப்படி ப்ளூ சட்டை மாறன் அஜித்தை உருவ கேலி செய்து இருக்கும் விஷயம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையானது. இதனால் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ப்ளூ சட்டை மாறன் மீது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து ஒரு முறை அஜித் கொடுத்து இருந்த விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற பாடிசேமிங் விமர்சனங்களை இதற்கு முன்பே பலமுறை அஜித் எதிர்கொண்டிருக்கிறார். 2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் ஜி. இந்த படத்தின் போது அஜித் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து இருந்தது.

This image has an empty alt attribute; its file name is 2-20-670x1024.jpg

விமர்சனம் செய்பவருக்கு அஜித்தின் பதிலடி:

அதற்கு அஜித் அளித்த பதில் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். தற்போது அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அஜித், படம் நல்லாயிருக்கு இல்லையான்னு சொல்லாம சிலர், நான் குண்டாக இருக்கேன்னு பெர்சனலாக கமெண்ட் அடிக்கிறார்கள். 15 ஆபரேஷனுக்கு பிறகு என் மெட்டபாலிசம் மாறிவிட்டது. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். நான் நல்ல டான்ஸரா இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதுக்காக முயற்சி பண்ணுகிறேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கிறேன், சண்டை போடுகிறேன்.

-விளம்பரம்-

அஜித் கொடுத்த பேட்டி:

ஆனால், தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்கிறது வருத்தமாக இருக்கிறது என்று வெளிப்படையாக கூறியிருந்தார். அஜித் அமராவதி படத்தை முடித்த பிறகுதான் விபத்து ஏற்பட்டது. அப்போது அவருக்கு முதுகெலும்பு பகுதியில் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு சினிமாவில் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கும் போது உயிர் போகும் வலியை பொறுத்துக் கொண்டு தான் நடிப்பாராம். பல நேரம் படத்தின் சண்டைக் காட்சியில் நடித்துவிட்டு தனியாக அவர் வலியில் அழுது புலம்பி இருப்பதை கூட பலரும் பார்க்கிறார்கள்.

ரசிகர்களால் நடந்த நிகழ்வு:

அதுமட்டும் இல்லாமல் எல்லா நடிகர்கள் போலவே அஜித் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, விழாக்களில் கலந்து கொள்வது என்று சாதாரணமாகத்தான் இருந்தார். இன்னும் சொல்லப்போனால் ரசிகர்களுக்கு அதிக மரியாதையும் கொடுத்தார். அஜித் ரசிகன் என்ற ஒரு பெயரில் அப்போது ரசிகர் மன்ற இதழில் அவர் நேரிடையாக பங்களிக்கும் செலுத்தி வந்தார்.ஆனால், சில ரசிகர்கள் தான் மரியாதைக்காக கை குலுக்கினால் தோளில் கைபோட்டு என்ன மச்சான் என்று கேட்கிற அளவில் நடந்து கொண்டார்கள். பின் தள்ளி இருந்தால் தான் மரியாதை என்பதைப் புரிந்து கொண்ட அஜித் ரசிகர்களிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார் என்று கூறப்படுகிறது.

Advertisement