அஜித்தை 18 கிலோமீட்டர் துரத்தி சென்ற ரசிகர்..!நடுவீதியில் வாகனத்தை நிறுத்தி அஜித் செய்த செயல்..!

0
275
Ajith

தமிழ் சினிமாவின் தல என்றழைக்கப்படும் நடிகர் அஜித் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட ஒரு மாபெரும் நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.அஜித்தை நேரில் கண்டால் அவரது ரசிகர்கள் தலை கால் புரியாமல் எப்படியாவது அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே எண்ணுவார்கள்.

Ajithwithfan

நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்று வந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று மும்பையில் படமாக்கபட்டு வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளது.அதனால் நடிகர் அஜித் தனது தாடியை ஷேவ் செய்து புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார்.

இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் அஜித்தின் காரை 18 கிமீ துரத்திச்சென்று அவருடன் புகைப்படம் எடுத்து அதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சென்னை விமான நிலையத்தில் தலயை சந்தித்தேன். கூட்ட நெரிசலில் கூட தலயுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை தல அவர்களின் காரை 18 கிமீ பின் தொடர்ந்தோம். சற்று தொலைவில் கார் நிறுத்தப்பட்டு டிரைவர் இறங்கி வந்தார். தல என்னை அழைத்தார்.

தம்பி உன் பெயர் என்ன என்றார். கணேஷ் என்றேன். கணேஷ் தம்பி, இதுமாதிரி பின் தொடர்ந்து வந்து விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும், இது தவறு என்றார் தல. நான் மன்னிப்பு கேட்டேன். அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தார். போட்டோ எடுத்தபின் விஸ்வாசம் கண்டிப்பா வெற்றிபெறும் என்று கூறினேன். அவர் பதிலுக்கு நன்றி கூறினார். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்என்று பதிவிட்டுள்ளார்.