இந்திய ராணுவத்திலும் அஜித்தின் பங்களிப்பு – தல ரசிகர்கள் பெருமைப்படும்படியான விஷயம் இதோ

0
1702
- Advertisement -

இந்திய ராணுவத்திற்கு நடிகர் அஜித்குமார் ஆலோசராக இருந்த தக்சா நிறுவனம் தான் ட்ரோன்களை தயாரிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். அந்த வகையில் இவர் ட்ரோன் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் விமானவியல் துறை சார்பாக தக்சா நிறுவனம் பதிவு செய்து செய்யப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ட்ரோன்களுக்கான போட்டி :

இந்த நிறுவனத்திற்கு நடிகர் அஜித் தான் ஆலோசராக இருந்து இருக்கிறார். மேலும், இவர் ட்ரோன்களை தயாரிப்பதற்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. பின் கடந்த 2018 ஆம் ஆண்டு தக்ஷா நிறுவனம் உலக அளவில் நடைபெற்ற ட்ரான் போட்டியிலும் கலந்து கொண்டிருந்தது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்திருந்தது.

தக்ஷா நிறுவனம்:

இது ஆஸ்திரேலியா, தாய்லாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், சீனா போன்ற பல நாடுகளுடன் இந்தியா போட்டியிட்டது. அதில் இந்தியா சார்பில் அஜித் தக்ஷா நிறுவனமும் கலந்து கொண்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் சர்வதேச அளவிலான போட்டிகளில் தக்ஷா நிறுவனம் பங்கு பெற்று வெற்றியும் பெற்றிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் மாநில அளவில் ட்ரோன் தயாரிப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் தக்ஷா நிறுவனம் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு ட்ரோன்களை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்திய ராணுவ ஒப்பந்தம்:

தற்போது இந்திய ராணுவத்திற்கு 165 கோடி ரூபாய் மதிப்பில் 200 ட்ரோன்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த பன்னிரண்டு மாதங்களில் இந்த ட்ரான்களை தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக நடிகர் அஜித் தன்னுடைய பங்களிப்பை கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. தற்போது அஜித் அவர்கள் தன்னுடைய பைக் பயணத்தில் சென்று இருக்கிறார்.

அஜித் நடிக்கும் படம்:

கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் துணிவு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ்ந்திருமேனி இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement