3 மாசமா எனக்கு இந்த பிரச்சனை இருந்துச்சி – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய காரணம் குறித்து தீபிகா.

0
1910
deepika

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஐஸ்வ்ர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகா நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், எனக்கு முகப்பரு பிரச்சனை இருந்ததால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தேன். கடந்த ஜூன் மாதம் முதலே எனக்கு முகப்பரு அதிகமாக துவங்கியது. மேக்கப் போட்டதால் தான் என்னுடைய முகப்பருக்கள் அதிகமானது. எனக்கு இந்த பிரச்சினை இருப்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் மேலும், இதை சரி செய்ய எனக்கு நேரமும் கொடுத்தார்கள்.

This image has an empty alt attribute; its file name is image-53.png

ஆனால், கடந்த மூன்று மாதங்களாக ஆகியும் எனக்கு இந்த பிரச்சனை தீரவில்லை. இருந்தாலும் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், மேக்கப் போட போட இன்னும் அதிகமாகத்தான் வந்தது என்று கூறினார். மேலும், சீரியலில் இருந்து நீங்களாக விலகியவர்கள் இல்லை விளக்கப்பட்டு என்று கேட்டதற்கு பதிலளித்த தீபிகா ‘பொதுவாக எங்கள் ஷூட்டிங் முடிந்து கொஞ்சம் பிரேக் கிடைக்கும்.

இதையும் பாருங்க : சூரி இல்ல திருமணத்தில் திருடிய டிப் டாப் திருடன் இவர் தான் – CCTVயால் சிக்கிய கீரிப் புள்ள.

- Advertisement -

அதன் பின்னர் எப்போது ஷூட்டிங் ஆரம்பிக்கிறதோ எங்களுக்கு அழைப்பு வரும். ஆனால், இந்த முறை அப்படி எதுவும் அழைப்புகள் வரவில்லை. அதனால் எனக்கு சந்தேகம் இருந்தது. அதன் பின்னர்தான் மேனேஜர் கால் செய்து நான் நீக்கப்பட்டதை அறிவித்து இருந்தார் இருந்தாலும் எனக்கு மிகவும் ஆதரவு கொடுத்தார்கள்.

அவர்கள் எதுவும் சப்போர்ட் செய்யாமல் இப்படி செய்திருந்தால் கோபம் வந்து இருக்கலாம் ஆனால், அவர்கள் எனக்கு சப்போர்ட் கொடுத்தார்கள் அதனால் எனக்கு எந்த கோபமும் இல்லை என்று கூறியுள்ளார். எனக்கு தெரிந்து கண்ணன் தான் பாவம் அவனுக்கு தன பேரே அமையமாட்டிங்குது என்று கூறியுள்ளார் தீபிகா.

-விளம்பரம்-
Advertisement