அஜித் நடிக்கிறேன் என்று கேட்டும்..! கையெடுத்து கும்பிட்டு மறுத்த தயாரிப்பாளர்.! ஏன் தெரியுமா

0
1093
ajith

நடிகர் அஜித் என்றால் எப்போதுமே மாஸ் தான், தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் தல என்றுமே தல தான். இவரது படத்தை தயாரிக்க வாய்ப்பு கிடைத்துவிடாத என்று பல தயாரிப்பாளர்கள் காத்துக்க கொண்டிருக்கும் நிலையில். தன்னிடம் தேடி வந்த அஜித் படத்தின் வாய்ப்பை தட்டி கழித்துள்ளார் ஒரு பிரபல தயாரிப்பாளர்.

இயக்குனர் சிறுத்தை சிவாவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ள அஜித், அவருக்கே தொடர்ந்து தனது 4 படங்களின் பட வாய்ப்பை கொடுத்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு வெளியான “வீரம் ” படத்தில் இணைந்த அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி, அதன் பின்னர் வேதாளம், விவேகம் என்று பல படங்களை எடுத்து வெளியிட்டனர்.

இதில் சிறுத்தை சிவா முதன் முதலில் அஜித்தை வைத்து எடுத்த “வீரம் ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை இந்த படம் பெற்றுத்தந்த போதிலும் இந்த படத்தை தயாரித்த விஜயா ப்ரோடக்ச்ஷன் தயாரிப்பாளர் பாரதி ரெட்டிக்கு 7 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாம்.

Producer-Bharathi-Reddy

இதனால் பெரும் சோகத்தில் இருந்த பாரதி ரெட்டியிடம் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிப்பது குறித்த ஒரு அழைப்பு ஒன்று வந்ததாம். ஆனால் நான் அஜித் படத்தை தயாரிக்க மாட்டேன் என்று கும்மிடு போட்டு எஸ்கேப் ஆகியுள்ளார் பாரதி ரெட்டி.