அஜித் அடுத்த படம் ஹிந்தி ரீமேக்கா.! பெரிய நிறுவனத்தில் நடிக்கப்போகிறாரா.! வெளிவந்த தகவல்

0
267

நடிகர் அஜித் நடித்த கடைசி 3 படங்களும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் வெளியானது. அதுபோக தற்போது 4வது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்துள்ள நடிகர் அஜித் “விசுவாசம் ” படத்தில் நடித்து வருகிறார். இதனால் அஜித்- சிவா ஜோடியையே பார்த்து ரசிகர்களுக்கு சளித்து போய்விட்டது.

ajithkumar

இந்நிலையில் “விசுவாசம்” படத்திற்கு பின்னர் நடிகர் அஜித் எந்த இயக்குனருடன் இணைந்து படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஒருவேளை அது ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர் கயாத்ரி இயக்கத்த்திலோ அல்லது ‘தீரன்’ படத்தை எடுத்த எச் .வினோத் இயக்கத்திலோ இருக்கலாம் என்று பேசப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது அஜித்தின் அடுத்த படம் இயக்குனர் வினோத் குமாருடன் இருக்கலாம் என்று இணையத்தளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இயக்குனர் எச். வினோத் ஏற்கனவே ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் ‘ என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருப்பதால் இவரது இயக்கத்தில் அஜித் நடித்தால் அது மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

bony

இதனை அடுத்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. மேலும், அவருடன் சேர்ந்து மற்றுமொரு பெரிய நிறுவனம் ஒன்றும் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாம். அதுமட்டுமல்லாமல் அந்த நிறுவனத்திடம் ஒரு பாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையும் உள்ளதாம். அந்த படத்தின் கதையில் தான் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.