திருமண நாள் கூட இல்லை – ஆனால், ஸ்பெஷல் தினத்தை கொண்டாடிய அஜித். வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி இது தான்.

0
708
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் இருக்கின்றனர். சூர்யா ஜோதிகா துவங்கி ஆர்யா – சயிஷா என்று பல நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும் இந்த லிஸ்டில் டாப்பில் இருப்பது என்னவோ அஜித் – ஷாலினி ஜோடி தான். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி.நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி மற்றும் இவர்களுடைய அண்ணன் ரிச்சர்ட் ஆகும். இவர்கள் ரெண்டு பேரும் கூட சினிமா உலகில் பிரபலம் ஆனவர்கள்.

- Advertisement -

ஷாலினி அஜித் :

பேபி ஷாலினியின் சகோதரியான ஷமிலி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தார் இந்த படத்தில் அஞ்சலி என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்பதற்கான தேசிய விருதும் கிடைத்தது அதன் பின்னர் தமிழில் துர்கா தைப்பூசம் செந்தூர தேவி என்று பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஷாலினி தங்கை ஷாமிலி :

இறுதியாக விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீர சிவாஜி படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் தமிழில் திரைப்படங்களில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார் ஷமீலி. மேலும், இவர் ஓவியர் என்பதும் பலரும் அறிந்திராத ஒன்று. அஜித்தும் சரி, ஷாலினியும் சரி இருவரும் பெரிதாக லைம் லைட்டை விரும்பாதவர்கள். மீடியா வெளிச்சத்தை முற்றிலும் விரும்பாதவர் நடிகர் அஜித், அவரது குடும்பத்தினரும் அதனையே பின்பற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-

அஜித் ஷாலினி ’23YearsOfTogetherness’ :

அதே போல் இருவரும் எந்த சமூக வலைதள பக்கத்திலும் கிடையாது. இருப்பினும் ஷமீலி மட்டும் சமூக வலைதளத்தில் இருக்கிறார். மேலும், சமீப காலமாக இவர் அஜித் மற்றும் அவரது வீட்டில் நடக்கும் சுப விசேஷங்களின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இவர் மூலம் நடிகர் அஜித்தின் குடும்ப புகைப்படம், அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் வெளியாவதுண்டு. அவ்வாறு வெளியாகும் புகைப்படங்களுக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே மவுசு உண்டு. அந்த வகையில் சமீபத்தில் அஜித் மற்றும் ஷாலினி இருவரின் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட ஷமீலி ’23YearsOfTogetherness’ என்று பதிவிட்டுள்ளார்.

shamlee

கொண்டாட்டத்தின் பின்னணி :

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் குழம்பி போய்விட்டனர், காரணம். அஜித் – ஷாலினி திருமணம் நடந்தது 24 ஏப்ரல் 2000ஆம் ஆண்டு தான். அதன்படி இவர்களுக்கு திருமணம் ஆகியே 22 வருடங்கள் ஆகிறது. அப்படி இருக்க ’23YearsOfTogetherness’ என்று ஷமீலி பதிவிட காரணம். திருமணத்திற்கு முன்பே, அதாவது 1999 ஆம் ஆண்டே அஜித் – ஷாலினி இருவரும் காதலில் விழுந்தனர். இருவரும் காதலில் விழுந்து 23 ஆண்டுகள் ஆகிறது. அதனை குறிப்பிட்டே ஷமிலி இப்படி பதிவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement