அஜித் மகளா இது.! இப்படி வளந்துட்டாங்க.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

0
746

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். தற்போது சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ”விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார்.

Anoskha

என்னதான் அல்டிமேட் ஸ்டார் ஆனாலும் தனது பிள்ளைகளுக்கு அல்டிமேட் அப்பாவாக விளங்கி வருகிறார் நடிகர் அஜித். பொதுவாக வெளியே வரும் போது அவ்வளவாக அலட்டி கொள்ளாத அல்டிமேட் ஸ்டார் என்னதான் ஷூட்டிங்கில் பிஸி ஆக இருந்தாலும் தனது மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா அவர்களுக்கு நேரம் ஒதுக்கவதில் மிகுந்த அக்கறை கொள்வார்.

சமீபத்தில் நடந்த தனது மகளின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் நடித்து கொண்டிருக்கும் ‘விசுவாசம்’ பட கெட்டபில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், நீண்ட காலமாக அஜித் தனது மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏக்கமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் தனது மகள் அனோஷ்கா ஆகியோர் சிலருடன் எடுத்துக்கொண்ட குரூப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் குழந்தையாக பார்த்த அஜித்தின் மகள் அனோஷ்கா சற்று வளர்ந்து இருப்பதை கண்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் சற்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.