அஜித் பொது இடங்களுக்கு வராததுக்கு இதுதான் காரணம்.! பிரபல காமெடி நடிகர் கூறிய தகவல்.!

0
460

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்றழைக்கபடும் அஜித் பல கோடி ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். பல ரசிகர்களை கொண்டிருந்தாலும் நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளிலும், திரைப்பட கலை நிகழ்ச்சியிலும் காண்பது என்பது மிகவும் அறிது தான். சமீபத்தில் இதற்கான காரணத்தை காமெடி நடிகர் தம்பி ராமைய்யா தெரிவித்துள்ளார்.

ajithkumar

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “விசுவாசம்” படத்தில் நடித்து நடிகர் தம்பி ராமைய்யா , அந்த படத்தில் நடிகர் அஜித்தின் தாய் மாமனாக நடித்துள்ளார் என்று ஏற்கனவே தகவலைகள் வெளியாகி இருந்தன.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் தம்பி ராமையா, நடிகர் அஜித் பொது விழாக்களில் எதற்காக கலந்து கொள்வதில்லை என்பதற்கான விளக்கத்தை கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்தில் அவர் தெரிவிக்கையில் ‘அஜித் சார் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார். அதற்க்கு முக்கிய காரணமே பொது இடங்களில் அவரை காண ரசிகர்கள் வரும் போது கூட்ட நெரிசலில் சிக்கி விழுந்து அடிபட வாய்ப்புள்ளது, அதுமட்டும் இன்றி அவர்களை கஷ்டப்படுத்தவும் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

Thambi Ramaya

அஜித் அவர்கள் பல விடயங்களில் மௌனமாக இருந்து வருகிறார். அவரது மௌனத்திற்கு கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இதனை நாட்கள் அஜித் ரசிகர்களுக்கு இருந்த சந்தேகம் சற்று தீர்ந்துள்ளது. ஆனால், உண்மையிலேயே நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ளாததற்கு இது தான் காரணமா என்று தெரியவில்லை.