நடிகர் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. வழக்கமாக மாஸ் ஹீரோ படங்களின் முக்கிய அறிவிப்புகள் முக்கிய தினங்களில் தான் வெளியிடுவார். விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட அவரது பிறந்தநாளான ஜூன் 22 தேதி வெளியாகி இருந்தது.
ஆனால், அஜித்தின் ‘விஸ்வாசம் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எந்த வித முன்னறிவிப்புமின்றி அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகி இருந்தது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், அஜித் அவர்கள் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை அதனை மறைக்க தனது பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டு ரசிகர்களை திசை திரும்பியுள்ளார் என்று ஒரு குரூப் கிளம்பியுள்ளது.
அஜித் மற்றும் விஜய் தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். இருவருமே பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இதில் அஜித் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கலந்து கொள்வதில்லை என்றாலும் அவரது நல்ல குணம் பற்றி அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான்.
பொதுவாக சமூக பிரச்சனைகள் ஏதேனும் வந்தால் அரசியல்வாதிகளை விடுத்தது நடிகர்கள் என்ன செய்தார்கள் என்று தான் முதலில் பார்க்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் 70 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார். ஆனால், அஜித் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று சிலர் குற்றம் சாட்டிவந்தனர்.
இந்நிலையில் அஜித் அவர்கள் கேரள மக்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யாமல் இருந்ததையும், விஜய் செய்த உதவியையும் மறைப்பதற்காக தான் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டனர் என்று சிலர் வதந்திகளை கிளப்பி வருவது அஜித் ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக அமைந்துள்ளது. பொதுவாக அஜித் நல்ல குணம் படைத்தவர் என்ற ஒரு பெயர் தமிழ் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே இருக்கிறது, அதனால் அவர் அப்படி செய்ய மாட்டார் என்ற விமர்சனமும் நிலவுகிறது.