தமிழ் சினிமாவில் தல மற்றும் தளபதி இரு துருவங்களாக விளங்கி வருகின்றனர்.அவர்களின் இருவரது படங்கள் வந்தாலே ரசிகர்களுக்கு திருவிழா தான்.அதில் தல அஜிதின் ஒரு சில படங்கள் அவர் நடித்ததால் மட்டுமே ஹிட் ஆகும்.
ஆசை படத்தில் தொடங்கி இன்று வரை அஜித் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.அஜித்துக்கு வந்த பல படங்களில் அவர் நடிக்கத்தவரி மற்ற நடிகர்கள் நடித்து அது மாபெரும் ஹிட்டானது.அந்த வருசயில் ஏ.ஆர் முருக தாஸ் அஜித்துடன் இணைந்து படம் எடுக்க இரண்டு முறை முயற்சி செய்துள்ளார்.அதில் ஒன்று கஜினி மற்றொரு படம் இளையதளபதி விஜய் நடித்த கத்தி. இந்த இரண்டு மாபெரும் ஹிடானது.
ஆனால் இந்த இரண்டு படத்திலும் முதலில் அஜித் தான் நடிக்க இருந்தது,ஆனால் ஆரம்பகட்டத்திலேயே அஜித் இந்த படங்களில் இருந்து விலகிவிட்டார் .மேலும் விஜய் நடித்த கத்தி படத்திற்கு முன்னாள் கூட அவர் நடித்த கில்லி படத்தில் முதலில் அஜித் தான் நடிக்கவுள்ளதாக இருந்தது.ஆனால் அந்த படத்திலும் அஜித் நடிக்கவில்லை.
இந்த இரண்டு படங்களுமே விஜய்க்கு நல்ல திருப்புமுனையக அமைந்தது.ஆனால் இந்த படங்களில் அஜித் நடிக்காதது அவரது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தம் தான்.மேலும் ஆர்யா நடித்த நான் கடவுள் ,சூர்யாவின் நேருக்கு நேர் ,காக்க காக்க போன்ற படங்களிலும் அஜித் நடிக்கவிருந்ததாக இருந்தது.ஆனால் அந்த படத்திலும் அஜித் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.