நடிகர் சங்கம் கட்ட யார்கிட்ட பணம் கேட்கிறீங்க ! அஜித் கொடுத்த அதிரடி பதில் !

0
2961
ajith

நடிகர் சங்கத்தில் ஓர் அரசியல் ஓடுகிறது என்றால் அது நடிகர் சங்க கட்டிடம்தான். இதனை பெரும் பேச்சு பொருளாக முன்னிறுத்திதான் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றார் விஷால். தற்போது அந்த கட்டிடம் கட்டுவதற்காக நிதி வேண்டும் எனக் கூறி மலேசியாவில் சென்று 350 தமிழ் திரைகளைஞர்கள் நட்சத்திர விழா நடத்தினர்.

இதில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆகிய போட்டிகளும் ஆடப்பட்டது. இதில் வரும் பணத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டலாம் என்னும் யோசனையில் சென்றுள்ளது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும்.
ajithஆனால் இந்த விழாவிற்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோர் செல்லவில்லை. விஜய்க்கு வேறு காரணங்கள் இருந்ததால் போகவில்லை. அஜித் எப்போதும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை.

ஆனால் இதுகுறித்து தற்போது நடிகர் சங்க அறங்காவலர் (ராஜினாமா) பதவியில் இருக்கும் எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.

இந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அஜித்தை அழைத்த போது அவர் வர விருப்பம் இல்லை எனக் கூறினார். ஏனெனில் ஏகற்கனவே மக்களிடம் இருந்து தான் டிக்கெட் காசு வசூல் செய்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டவும் அவர்களிடம் தான் வாங்கவேண்டுமா.? நாமே பணம் போட்டு காட்டலாம் எனக் கூறியுள்ளார் அஜித்.

மேலும் இதனால் தான் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பதாக எஸ்.வி சேகர் கூறினார்.

முன்னர் ஒருமுறை விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, இதே யோசனையை விஜய்காந்திடமும் அஜித் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.