பெரும் கேலிக்கு உள்ளான அஜித்தின் பைக் ரைட் – ‘#FraudCitizenAjith’ என்ற ஹேஷ் டேக்கை போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள். காரணம் இதுதான்.

0
525
ajith
- Advertisement -

இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே அஜித் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி தான் வருகிறது. சமீபத்தில் தான் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இருந்தார்.

-விளம்பரம்-

பைக்கில் லடாக்கிற்கு ட்ரிப் சென்றிருந்த அஜித்குமாரின் பைக் இன்சூரன்ஸ் செய்யவில்லை என்ற புதிய சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் மத்தியில் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

- Advertisement -

அஜித்தின் பைக் ரைடு:

அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார் அஜித். இப்படி அஜித் உடைய எதாவது ஒரு அன்சீன் புகைப்படம் கிடைத்தால் போதும் அதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அந்த வகையில் அஜித் அவர்கள் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து லடாக் வரை பைக் பயணம் செய்திருக்கிறார். அங்கு அவர் கரடு முரடான பாதையில் மாஸாக பைக் ஓட்டியிருக்கிறார். இவருடன் ஏகே 61 பட கதாநாயகி மஞ்சு வாரியரும் பைக் ரைடு செய்திருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வைரலாகி இருந்தது.

அஜித் பைக் குறித்த சர்ச்சை:

இந்நிலையில் அஜித்தின் பைக் குறித்த ஒரு புதிய சர்ச்சை தற்போது எழுந்து உள்ளது. அதாவது, லடாக்கிற்கு அஜித் பயணம் மேற்கொண்ட பைக் BMW R 1200 என்ற மாடல் ஆகும். இந்த புகைப்படமும் தெள்ளத் தெளிவாக சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அந்த வாகனத்தில் நெவர் கிவ் அப் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக் எண்ணை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் சர்ச் செய்திருக்கிறார்கள். அப்போது அந்த bmw பைக் சென்னை தெற்கில் நவம்பர் 2019 ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்

அதுவும் அஜித் குமார் பெயரில் தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பைக்கான இன்சூரன்ஸ் ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த 2020 நவம்பர் மாதமே இந்த பைக்கின் இன்சூரன்ஸ் முடிந்திருக்கிறது. இதற்கான ஸ்கிரீன்ஷாட் தான் தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பதிவிட்டு இன்சூரன்ஸ் முடிந்த பைக்கில் தான் அஜித் லடாக் வரை சென்று இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அஜித் நடிக்கும் படங்கள்

தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு புத்தாண்டில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பின் அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு செப்படம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement