பிறந்த நாளுக்கு ஒரு மாசம் இருக்கு.! அதுக்குள்ள அஜித் ரசிகர்கள் செய்ததை பாருங்க.!

0
887
Ajith-Birthday
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அதேபோல அஜித்திற்காக அவரது ரசிகர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று அடிக்கடி நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

அஜித் தற்போது ‘தீரன்’ புகழ் வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்போதே அஜித்தின் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை சமூகவலைதளத்தில் ஆரம்பித்துவிட்டார்கள்.

அதே தேதியில் தான் அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் இப்போதே கொண்டாடத்தில் இருந்து வருகின்றனர். அதற்கு முன்பாகவே அஜித் ரசிகர்கள் ஒரு ஹாஸ் டாக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

வரும் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால் தற்போதே அஜித் ரசிகர்கள்#1MonToEmperorTHALABDay என்ற ஹேஷ் டாக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இதனால் இன்னும் பிறந்தநாளுக்கு என்ன செய்ய போகிறாரார்களோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement