30 ஆண்டுகளுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக அஜித் நடித்த முதல் படம் இது தான் – வீடியோ இதோ.

0
1095
ajith
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார் தல அஜித். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், தல அஜித் நடித்த முதல் படம் அமராவதி என்று தான் அனைவருக்கும் தெரியும்.

-விளம்பரம்-

ஆனால், திரையுலகில் அஜித் நடித்த முதல் படத்தின் காட்சியை அனைவரும் பார்த்து இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான். தற்போது அந்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இயக்குனர் செண்பக ராமன் இயக்கத்தில் வெளிவந்த “என் வீடு என் கணவர்” என்ற படத்தில் அஜித் பள்ளி மாணவனாக நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : .‘நேருக்கு நேர்’ திரைப்படத்திற்காக நீங்கள் என்னை எடுத்த, அந்த ‘ ரஷ்யன் ஆங்கிள்’ புகைப்படம்தான் – கே வி ஆனந்த் பற்றி சூர்யா உருக்கம்.

- Advertisement -

இந்தப் படத்தில் வரும் என் கண்மனி என்ற பாடலில் சைக்கிளில் வரும் பள்ளி மாணவனாக அஜித் குமார் நடித்து உள்ளார். இப்படம் கடந்த 1990ம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த படம் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது அஜித் நடித்த இந்த என் வீடு என் கணவர் என்ற படத்தின் காட்சி சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் இதை தற்போது ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். இப்படத்தைத் தொடர்ந்து தல அஜித் 1992 ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதற்கு பிறகு தான் தமிழில் அமராவதி என்ற படத்தில் நடித்தார். இப்படத்தைத் தொடர்ந்து காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், நீ வருவாய் என, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூவெல்லாம் உன் வாசம், ரெட், வரலாறு, கிரீடம், பில்லா, மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விஸ்வாசம் என்று பல சூப்பர் ஹிட் காதல், குடும்ப கதைகளை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வளர்ந்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement