ஏன்டா நாயே, மனுஷனாடா நீனு டி ராஜேந்தரின திட்டிட்டு ஷூட்டிங் விட்டே போய்ட்டாரு சத்யராஜ் – ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்.

0
1016
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்தவர் ஜூடோ கே.கே. ரத்தினம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை இயக்குனராக இருந்துள்ளார். இவர் இதுவரை 1500 படங்களுக்கு மேல் சண்டை இயக்குனராக பணி புரிந்துள்ளார். இவர் எம்ஜிஆர், சிவாஜி என்று தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் என அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.

வீடியோவில் 18 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

தற்போது இவருக்கு 92 வயதாகிறது. மேலும், சினிமா உலகிலேயே மூத்த ஸ்டண்ட் மாஸ்டராக ஜூடோ கே.கே. ரத்தினம் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூடோ கே.கே. ரத்தினம் அவர்கள் சமீபத்தில் சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் பல நடிகர்களின் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து உள்ளேன்.

- Advertisement -

அப்படி ஒரு முறை டி ராஜேந்திரன் அவர்களின் சொந்தப் படமான தங்கைக்கோர் கீதம், உயிருள்ள வரை உஷா இந்த இரண்டு படங்களுக்கும் நான் தான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தேன். அந்தப் படங்களில் சத்தியராஜ் மற்றும் டி ராஜேந்திரன் இடையே சண்டைக் காட்சி நடந்தது. அதற்கு நான் பக்குவமாக எப்படி பண்ணனும் என்றும் எந்த அளவுக்கு செய்யணும் என்றும் எல்லாமே பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால், டி ராஜேந்திரன் அவர்கள் வேகமாக சத்தியராஜ் வயிற்றில் குத்தி விட்டார்.

இதனால் சத்தியராஜ் கோபமடைந்து டி ராஜேந்திரனை ‘மனுஷனாடா நீ, என்ற இப்படி வயித்துல குத்தர’ன்னு பயங்கரமாக திட்டி விட்டார். உடனே சத்யராஜ் ஷூட்டிங் விட்டு போய் விட்டார். பிறகு சத்யராஜ்ஜை சமாதானப் படுத்தி அதற்கு பிறகு தான் நடிக்க வைத்தார். அதே மாதிரி ஜிப்பின் மேல் நின்று குதிக்கும் காட்சிகளில் டி ராஜேந்திரன் நான் தான் செய்வேன் என்று சொன்னார். நாங்களும் வேண்டாம், உங்களால் முடியாது, பிரச்சனை வரும் என்று நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. பின் ஜீப் மேல் இருந்து குதித்தார். பிறகு டி ராஜேந்திரன் கீழே விழுந்து கால் உடைந்துவிட்டது. சொன்னால் கேட்டால் தானே என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement